தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.! பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா, ராஜ்நாத்

டெல்லி:இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி, பவன் கல்யாண் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வளவு பெரிய குழுவை வரவேற்கும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.

அடுத்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகம் பற்றி குறிப்பிட்டார். அதில், வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது கண்கூடாக தெரிகிறது என்றும், தமிழகத்தில் இருந்து எம்.பிக்கள் வராதபோதும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.