உறுதியான வெற்றியை கொண்டாட இனிப்புகளுடன் தயார் நிலையில் பாஜக தொண்டர்கள்!

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசானது சிவசேனா கட்சியுடன்

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசானது சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. இதை பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.அதே போல காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியானது 145 தொகுதிகளிலும்,  தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள்ளன.இதில் பாரதியா ஜனதா 97 தொகுதிகளிலும், சிவசேனா 62தொகுதிகளிலும்  முன்னிலை வகித்து வருவதால் மஹாராஷ்டிராவில் மீண்டும்பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி வருகிறது.இதனால், பாஜகவினர் வெற்றியை கொண்டாட லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளோடு கொண்டாட தயாராகி வருகின்றன.