சட்டசபையில் பாஜக , சிவசேனா வாக்குவாதம்.! நாளை வரை அவை ஒத்திவைப்பு.!

- இன்று காலை சட்டசபைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர்.
- இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையிலும் கைகலப்பு ஏற்படும் சூழல் இருந்ததால் சட்டசபை அரைமணி நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இருந்த பயிர்கள் அழிந்தன.இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ .25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என முன் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா வலியுறுத்தி இருந்தது.
ஆனால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா, பாஜக இடையில் ஏற்பட்ட பதவி பங்கீட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சிவசேனா ,பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டு தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சியமைத்து உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சட்டசபைக்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குங்கள் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர்.
இதனால் சிவசேனா மற்றும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் வைத்து இருந்த பதாகைகளை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பறிக்க முயன்றனர்.
இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையிலும் கைகலப்பு ஏற்படும் சூழல் இருந்ததால் சட்டசபையை அரைமணி நேரம் சபாநாயகர் நானா பட்டோல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.அரைமணி நேரத்துக்கு பின்பும் இதே நிலைமை நீடித்ததால் அவையில் நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025