வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
அசானி புயல்:
மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்:
இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இவை வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ரெட் அலர்ட்:
இதனைத் தொடர்ந்து,அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,இன்றும்,நாளையும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,அதிக கனமழை காரணமாக அந்தமான் நிகோபார் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
எச்சரிக்கை:
மேலும்,அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்,உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களை,இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது.அந்த வகையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
unknown node