அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Anil Ambani

மும்பை :ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

அதனோடு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று (ஆகஸ்ட் 23) தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில், குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அவரது வீட்டில், வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது.

கடன் மோசடி குறித்து அமலாக்கத்துறை செய்த வழக்குப்பதிவை தொடர்ந்து சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைகள் மும்பையில் பல இடங்களில் நடைபெற்றன, சிபிஐ இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்பு, ஆகஸ்ட் 5 அன்று அமலாக்க இயக்குநரகம் (ஈ.டி) அனில் அம்பானியை 17,000 கோடி ரூபாய்க்கு மேல் தொடர்புடைய வங்கி கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை செய்திருந்தது.