இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா..!

In India, 1.26 lakh people have been diagnosed with corona in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 29,28,000ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 685 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மொத்தமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 1,66,862 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,51,393 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 59,258 பேர் வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.