இந்தியாவில் சதம் அடித்த கொரோனா வைரஸ்.!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று காலை நிலவரப்படி 93 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

இந்நிலையில், மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.