கொரோனாவை குணப்படுத்தும் “Coronil”அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியது -ராம்தேவ்

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி தான் கொரோனில் உருவாக்கப்பட்டது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு 22-ஆம் தேதி ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீத்தில் பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.
மருந்துப்பொருளை அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ஆயுர்வேதிடம் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அதன் கலவை குறித்த விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது, இந்த பிரச்சினை ஆராயப்படும் வரை அதை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு நிறுவனத்திடம் கூறியது.
இந்நிலையில் ஒரு மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனை அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு ஏற்ப அல்ல என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பதஞ்சலி அனைத்து சட்டங்களுக்கும் இணங்கி தான் தயாரித்துள்ளது. இந்த பிரச்சினையில் தேவையற்ற எண்ணங்களிருந்து விலகி இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும் கொரோனில் மாத்திரை தொடர்பான சர்ச்சை தன்னையும் அவரது நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவையும் குறிவைத்து நடத்தப்பட்டது.
பதஞ்சலியின், கொரோனா வைரஸ் நோய்க்காக தயாரிக்கப்பட்ட “Coronil” அஸ்வகந்தா, கிலோய், துளசி ஆகியவற்றின் கலவையாகும். ஆயுர்வேத மருந்துகள் எந்த பக்க விளைவுகளையும் காட்டுவதில்லை என ராம்தேவ் கூறினார்.கொரோனா சிகிசைக்கு தயாரிக்கப்பட்ட Coronil மருந்தை தயாரிக்கும் போது பதஞ்சலி 100% விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றியுள்ளது. Coronil மருந்தை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என ராம்தேவ் மீண்டும் கூறியுள்ளார்.
நாங்கள் தயாரித்து இருக்கும் Coronil மருந்து கொரோனா வைரஸ் நோயை 70 சதவிகிதம் குணப்படுத்த முடியும். ஏழு நாட்களில் கொரோனா தொற்றில் இருந்து குணப்படுத்தும் என ராம்தேவ் தெரிவித்தார்.