டெல்லி :உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்த்திரையுலகில் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் நேரிலும், சமூக தளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக கட்சித் தலைவர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர். அந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடி அவரது எக்ஸ் தள பக்கத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது நடிப்பை புகழ்ந்தும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளித்தும் அந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “புகழ்பெற்ற திரைப்பட நடிகர் டெல்லி கணேஷின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவர் தனிப்பட்ட நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் ஆவார்.
அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஆழம் வரை சென்று மினக்கெடுவார். அதனால் தான் இனி வரும் தலைமுறைகள் கடந்தும் அனைவராலும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”, என பிரதமர் மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
unknown node