புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி அறிவிப்பு.!

கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதார‌ர்களுக்கும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Puduchery - diwali 2025

பாண்டிச்சேரி :புதுச்சேரி அரசு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் கீழ்கண்ட 5 பொருட்களை விலையில்லாமல் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது, கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதார‌ர்களுக்கும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தொகுப்பில் பின்வரும் பொருட்கள் அடங்கும்:

சர்க்கரை – 2 கிலோ

எண்ணெய் – 2 கிலோ

கடலைபருப்பு – 1 கிலோ

ரவை – 1/2 கிலோ

மைதா – 1/2 கிலோ

பாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், இந்தத் தொகுப்பு அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது பண்டிகைக் காலத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.