அதிகம் போன் உபயோகிக்காதே...., தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட 17 வயது சிறுமி...!

A 17-year-old girl from Hyderabad has committed suicide by hanging herself after her mother scolded her not to play too much on her cell phone.

செல்போனில் அதிகமாக விளையாடாதே என தாய் திட்டியதால் ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு மொபைலில் விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது தாய் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள சீலிங் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகம் போனில் கேம் விளையாடியதற்காக தாய் திட்டியதால், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் போன் உபயோகிக்காதே...., தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட 17 வயது சிறுமி...!