புது டெல்லி:பாலிவுட் நடிகையும் மக்களவை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியான ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள மக்கள், தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “இமாச்சல பிரதேசம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கிறது, எனவே நீங்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, தன்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதி தொடர்பான குறைகளை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறிஉள்ளார்.
எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார். மேலும், இது தொடர்பாக பேசிய அவர், “ஹிமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தன்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள தனது வீட்டிற்கு வரலாம் என்றும், மண்டியில் உள்ளவர்கள் நகரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
