கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து பரவும் தகவல்..!தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்..!-எடியூரப்பா ட்வீட்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து தகவல் பரவி வருகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து தகவல் பரவி வருகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு 75 வயது ஆகிறது. அதனால் பாஜகவின் மேலிடத்திலிருந்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள கூறியதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு பதவியேற்று ஜூலை 26 ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பாஜகவின் உண்மையாக தொண்டனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இதனால் கட்சி தொண்டர்கள் யாரும் மரியாதைக் குறைவான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.