வேகமாக பேருந்தை இயங்கிய ஓட்டுநர்.! தோப்புக்கரணம் போட வைத்த பொதுமக்கள்.!

- இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை செல்லும் சில தனியார் பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும் பாதசாரிகள் குற்றம் கூறினார்.
- இதை தொடர்ந்து வேகமாக பேருந்தை இயக்கிய ஒரு ஓட்டுனரை பொதுமக்கள் பேருந்தின் கூரை மீது தோப்புக்கரணம் போடச்செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை இயங்கி கொண்டு இருக்கும் சில தனியார் பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும், நெரிசலான இடங்களில் அதிவேகமாக செல்வதாவும் ராவ் நகர் பாதசாரிகள் குற்றம் கூறினார்.
மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் நடைபாதையில் செல்லும் மக்களை கவனிப்பதில்லை என குற்றம் கூறினர்.இது தொடர்பாக நகராட்சி தலைவர் சிவ்னாராயணிடம் புகார் கொடுத்து உள்ளனர். இது போன்று வேகமாக செல்லும் ஓட்டுநர்களுக்கு நூதன தண்டணை வழங்க முடிவு செய்த அப்பகுதி மக்கள் கூறினார்.
அதன் பேரில் நகராட்சி தலைவர் சிவ்னாராயன் அதிவேகமாக இயக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்களை பிடித்து தோப்புக்கரணம் போட சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து வேகமாக பேருந்தை இயக்கிய ஒரு ஓட்டுனரை பொதுமக்கள் பேருந்தின் கூரை மீது தோப்புக்கரணம் போடச்செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஓட்டுநரை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025