இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது இவர் தானாம்!

Health worker Manish Kumar has been vaccinated against corona at the Delhi Aims Hospital for the first time in India.

இந்தியாவிலேயே முதன்முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வரும் நிலையில், தற்போது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவைகளில் சிலவற்றிற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தற்பொழுது முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டது யார் என்றால் சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் தான். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட தடுப்பூசியை சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் அவர்கள் முதன் முதலாக பெற்றுக்கொண்டுள்ளார்கள். இன்று தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இன்று தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.