சென்னை :2026-ம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி, ஜூலை 15 வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் 10ம் வகுப்புக்கு மார்ச் 6ம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கு ஏப்.9ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வுகளும் ஒரே நேரத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும். இந்த அட்டவணை தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. ஒரு தேர்வு முடிந்ததும் 10 நாட்களுக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, 12 நாட்களுக்குள்ளாக மதிப்பீடு செய்து முடிக்கப்படும்.
மொத்தம் 204 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன, 10 ஆம் வகுப்பு தேர்வின் முதல் பதிப்பு பிப்.17 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் பதிப்பு மே 15 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.17 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடக்கின்றன.
மேலும், சிபிஎஸ்இ தேர்வு நெறிமுறைகள் மற்றும் Unfair Means Rules குறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இந்த விதிகளை பள்ளிகள் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
