வருமானவரி வலைப்பக்கம் சீரானது- இன்ஃபோசிஸ்..!

Fixed an issue with the webpage for filing income tax returns electronically.

மின்னணு மூலம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சிக்கல் சீராக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் தாக்கலுக்குwww.incometax.gov.inஎன்ற புதிய வலைப்பக்கத்தை அரசு தரப்பில் ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய வலைப்பக்கத்தில்  பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், இதில் பிரச்சினைகளும் அதிகமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானவரி வலைப்பக்கம் தொடங்கிய நாளிலிருந்து சரியாக செயல்படவில்லை. தொடர்ந்து கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, வலைப்பக்கத்தை வடிவமைத்த இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு நிதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. நிதி அமைச்சில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேரில் ஆஜராக இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் வருமான வரியை வலைப்பக்கம் சீராக்கப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து வருமான வரி கணக்கு தாக்கலுக்கான வலைப்பக்கம் இயங்குவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.