கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை : மாணவி காயம்!

A leopard has entered a college in Uttar Pradesh and injured a student.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கல்லூரிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து மாணவியை காயப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரின் சர்ரா எனும் பகுதியில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இன்டர் எனும் கல்லூரிக்குள் நேற்று திடீரென்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் அலறியடித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரை சிறுத்தை காயப்படுத்தியுள்ளது. இதை பார்த்தும் மாணவர்கள் ஒன்றும் செய்ய இயலாமல் நின்று கொண்டிருந்துள்ளனர். பின் ஆசிரியர்கள் வந்து மாணவியை கைப்பற்றியதுடன், வன அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன் பின் சிறுத்தை வகுப்பறைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.