"ஜனநாயகத்தை காக்க ஒன்றிணைவோம்" – தலைவர் ராகுல் காந்தி அழைப்பு!

டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Rahul Gandhi

டெல்லி :எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வாக்குத் திருட்டுக்கு” எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாஜகவுடன் இணைந்து வாக்காளர் பட்டியலை மாற்றியமைத்து, தேர்தலை சீர்குலைப்பதாக அவர் குற்றம்சாட்டியுனார்.

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள், புனையப்பட்ட முகவரிகள், இரட்டை வாக்காளர்கள் மற்றும் படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்தி மோசடியாக சேர்க்கப்பட்டதாக ஆதாரங்களுடன் கூறுகிறார்.

இந்நிலையில், டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படை அமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக வாக்கு திருட்டு அமைந்துள்ளது. வெளிப்படையான, சுதந்திரமான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே நம் முதன்மை கோரிக்கை. அதனை செயல்படுத்த ஒன்றிணைவோம்.

இது ஜனநாயகத்தை காக்கும் போராட்டம். வாக்குகள் திருடப்படுவது, ‘ஒரு நபர் – ஒரு வாக்கு’ என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியமானது. அதனால்தான், மக்கள் மற்றும் கட்சிகள் சரிபார்க்கும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம்.

எங்களது குரலுக்கு வலு சேர்க்கhttp://votechori.in/ecdemandஎன்ற முகவரி அல்லது9650003420என்ற எண்ணை தொடர்புகொண்டு, வாக்கு திருட்டுக்கு எதிராக ஒன்றிணைவோம் என மக்களுக்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

unknown node