டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனான ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
unknown nodeஇன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பிற்கு பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டாக சந்தித்தனர்.அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறுகையில் ,ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறோம்.ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை அழிக்க பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சி செய்கிறார்.ஊழல் செய்தது யார்? ஊழல் பணம் எங்கே சென்றது என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைத்து, பொதுவான தளத்தை உருவாக்க இருக்கிறோம்.எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளேன் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.