மக்களவை தேர்தல் :நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் டெல்லிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் பயணித்தார்.
இந்தியா கூட்டணிக்கு நிதிஷை இழுக்கும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், 2 பேரும் ஒரே விமானத்தில் சென்றது புதிதாக பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
unknown node