#Breaking: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்!

Election Commission has said that the Central Armed Forces will be on duty to people vote freely. Puducherry NR Congress leader fulfilled his vote.

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் காரணமாக தன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.