சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு...

கேரளாவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சபரிமலையில் கபிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வன்முறையாக வெடித்தது.இந்த வன்முறையில் பாஜக தொண்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.பல இடங்களில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பதற்றம் ஏற்பட்டு வருகின்றது.மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்து அமைப்புகள் போராட்டம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது…!!