Today’s Live: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா..! எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிடு..!

கருமுத்து கண்ணனின் உடல் தகனம்:
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலரும், தியாகராசர் குழுமத் தலைவருமான கருமுத்து கண்ணனின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கருமுத்து கண்ணனின் உடலுக்கு அவரது மகன் ஹரி தியாகராஜன் தகனம் செய்தார்.
24.05.2023 5:21 PM
கூட்டறிக்கை வெளியிடு:
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டு, “பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டிடத்துக்கு மதிப்பில்லை” என்று கூறியுள்ளனர்.

24.05.2023 12:00 PM
ஜம்முகாஷ்மீர் விபத்து:
ஜம்முகாஷ்மீர் கிஷ்த்வாரில் பகல் துல் நீர் மின் திட்டத்தில் (Pakal Dul Project) பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற குரூசர் வாகனம் ஒன்று மலையிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
24.05.2023 11:30 AM
விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்:
சாவர்க்கர் பிறந்தநாளான மே28ல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கும் பிரதமர் மோடி, நாட்டின் குடியரசுத் தலைவர் முர்முவை புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது, சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது, எனவே விசிக சார்பில் கண்டிப்பதுடன் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24.05.2023 9:25 AM
சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் ஸ்டாலின்:
அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டலாண்ட் இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) நிறுவன அதிகாரிகளை சந்தித்தார். மேலும், தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
24.05.2023 8:45 AM
திறப்பு விழாவை புறக்கணிக்க திட்டம்:
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளது. விழாவுக்கான அழைப்பிதழ் கிடைத்தவுடன் இது தொடர்பாக இன்று கூட்டறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாம். நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் முர்முவுக்கு அழைப்பு விடுக்காததை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனம் எழுந்துள்ளது.
24.05.2023 8:05 AM
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025