ட்விட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பவர்களை (highest percentage of fake followers in Twitter) கொண்டவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 47.9 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 40.3 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கத்தோலிக்க திருச்சபையின் உலகத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் 16.7 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும்,அதேபோல் மெக்ஸிகோவின் அதிபர் பினா நியுடோ 7.08 மில்லியனுடன் நான்காவது இடத்திலும் ,சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 6.78 மில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று பெண் […]
கேரள அரசு அதிரடியாக, குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய தடைவிதித்துள்ளது. தமிழக அரசு, மலையேற்ற பயிற்சிக்காகன அனுமதி தொடர்பான விஷயங்கள் இன்னும் மேம்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சனங்கள் ஒரு புறம் வந்துகொண்டிருக்க ,காட்டுத்தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சை பெற ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த இந்த நிகழ்வு அண்டை மாநிலமான கேரளாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக கேரள அரசு […]
உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர்-அல்மோரா டோட்டல் என்னும் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் பேருந்து ஒன்று தடம்புரண்டு பாதாளத்தில் பாய்ந்தத்து. இந்த போருந்தில் 24 பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதுவரை வெளியான தகவலின்படி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதர பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்திற்கான காரணம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் கிரிக்கெட் மைதானத்தில் , மார்பக புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வுக்காக, பெண்களும், மாணவிகளும் இணைந்து மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இந்தியா – ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது. இதையடுத்து, மைதானத்திற்குள் வட்டவடிவமாக சுமார் 2 ஆயிரத்து 400 பெண்களும், பள்ளி மாணவிகளும் இணைந்து, மனித சங்கிலி ஏற்படுத்தினர். மார்பக […]
உறங்கியபோது அத்துமீறிய 2 பேரை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பேருந்து நிலையத்தில் வயதான பெண் ஒருவர் காலணியால் தாக்கினார். ஹூப்ளியில் தனது கிராமத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை தவறவிட்ட 55 வயது பெண் ஒருவர், பேருந்து நிலையத்திலேயே உறங்கியுள்ளார். அப்போது, அருகில் படுத்திருந்த 2 பேர், அவரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், இருவரையும் தனது காலணியால் தாக்கினார். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை(நேற்று) உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது […]
இந்திய வெளியுறவு துறை அமைச்ச சுஷ்மா சுவராஜ் நேபாளம் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விபத்துக்குள்ளான வங்கதேச விமானம். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் திங்கள்கிழமை தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாம்பர்டையர் க்யூ 400’ ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் […]
வனப்பகுதிகளில் மலையேறுவதற்கு குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் […]
பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர். இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான […]
பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாரணாசியில் கங்கை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டார். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து 100 மெகாவாட் திறன்கொண்ட சூரியமின்னுற்பத்தி பூங்காவை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வாரணாசி திரும்பிய தலைவர்கள் இருவரும் அங்குள்ள தீன்தயாள் உபாத்யாய் கைவினைப் பூங்காவை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கங்கைக்கரையில் புகழ் […]
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு 2ஜி தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு கண்ணுக்குத் தெரியாத கரம் ஏதும் முட்டுக்கட்டை போடுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், 6 மாதத்திற்குள் விசாரணைகளை முடிக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி தொடர்பான வழக்குகளின் விசாரணை நீண்டுகொண்டே செல்வதாக குறிப்பிட்டனர். இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் நாட்டு மக்களை அறியாமையில் வைத்திருக்க முடியாது என கூறிய நீதிபதிகள், 2ஜி மற்றும் […]
9 பேர் தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததால் மலையேற தற்காலிகமாக தடை விதித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசி உள்ளிட்டு 35,000 மக்கள் அனைவரும் பேரணியாக 200 கி.மீ கடந்து மும்பை நகரை வந்தடைந்தனர். இந்நிலையில் அதிகாலை தொழுகை முடிந்த கையோடு உழைத்து களைத்து போய் வெறும் காலோடும்,வெந்த புண்ணோடும் வரும் விவசாயிகளையும் ஆதிவாசிகளையும் ஆகாரம் கொடுத்து ஆசுவாசப்படுத்த காத்திருக்கும் எமது இஸ்லாமிய பெருமக்கள். அதேபோல் சீக்கியர்கள் குருத்வாராக்களில்,தலீத்கள் தத்தமது குடிசைகளில் இது போன்றே உபசரித்து […]
சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் திரும்பப் பெறக் கோரிப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி தவறாகப் பதிந்ததன் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தண்டனை அளித்த தீர்ப்பைத் […]
3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இந்திய அரசு மற்றும் பிரான்சின் நிதியுதவியுடன் ஒரு சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை (solar power plant) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரான் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திரமோடி ஆகிய இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்து, அவர்களின் விடுதலைக்கு உந்துதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என தெரிவித்தார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து, வேடிக்கையானது என்றும் கனிமொழி குறிப்பிட்டார். பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், சட்டம்-ஒழுங்கினை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் கே.கே.சர்மா பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதி முழுவதும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலியமைத்துப் பாதுகாப்புப் பலத்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – வங்கதேசம் இடையிலான எல்லையில் பல இடங்களில் வேலி அமைக்கப்படாமல் உள்ளதால் வேறு நாட்டவர்களும் தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடத்துவதற்கும் வாய்ப்பாக உள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் ஐந்தாண்டுகளுக்குள் இரு நாடுகளுடனான எல்லைப் பகுதி முழுவதும் […]
மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது. உணவு வழங்கல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு கழகத்துக்கு 50 ஆயிரம் கோடி தேவை என்றும், அதில் 5 ஆயிரம் கோடியை அரசே வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 45 ஆயிரம் கோடி ரூபாய் பங்குகள் மற்றும் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ஈட்டப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் […]
40 வயது பெண்ணை ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த 6 இளைஞர்கள், அவற்றை இன்டர்நெட்டில் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரன் மாவட்டத்தில் (Baran) நெடுஞ்சாலையோர உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனியே சென்றபோது எதிர்ப்பட்ட, ஏற்கனவே அறிமுகமான இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ படமும் எடுத்துள்ளார். இவற்றை வெளியே […]