பெங்களூருவில் மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே உணவுகள் வாங்கி சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் ஆடைகள் வாங்குவது என வேலைகள் அனைத்தும் சுலபமாகிவிட்டது. இந்நிலையில், பலரும் தற்பொழுது விமான டிக்கெட் முன்பதிவுகளை மொபைல் செயலிகள் மூலமாகவே செய்து விடுகிறார்கள், இதனால் சிலர் ஏமாற்றமும் அடைகிறார்கள். அதில் ஒன்றாக தற்பொழுது பெங்களூருவை சேர்ந்த 68 வயதுடைய […]
பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பறவை காய்ச்சல் வேகமாக […]
ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடி செலவில் குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. இது ஒரு நாளைக்கு 12 மில்லியன் மெட்ரிக் தரமான கன மீட்டர் போக்குவரத்து திறன் கொண்டது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு […]
முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கூறுகையில், முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட […]
உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல் விமான சேவை தொடங்கப்படும் என […]
பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர். பெங்களூரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏஜென்சிகளின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெங்களூர் இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாடீல் அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் […]
கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை, காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி .இந்நிகழ்வு, ‘ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு’ உருவாக்குவதில், முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குழாய்வழி எரிவாயு திட்டம் பற்றி: இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , 450 கி.மீ நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் […]
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி, மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் […]
தாங்கள் எந்த விவசாய நிலத்தையும் வாங்க மாட்டோம் எனவும், ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான திட்டம் முற்றிலும் இல்லை எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டங்களால் செல்போன் கோபுரங்களும் தாககப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான1500 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பஞ்சாப்பில் விவசாயிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா […]
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்று எஸ்ஐஐ தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் பூனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்றும் தனியாரில் வாங்குபவர்களுக்கு, ஒரு டோஸுக்கு ரூ.1,000 விலைக்கு விற்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். […]
வரப்போகின்ற மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் போட்டியிடப்போவதாக முஸ்லிம் தலைவர்களின் சந்திப்புக்கு பின்பதாக கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் வருகிற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த முறையாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் […]
ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான். அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்ந்து வருகிற நிலையில், போராட்டத்துக்கு முடிவு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் எந்த முடிவும் […]
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.இந்தியாவும் விமான சேவையை நிறுத்தியது.பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் […]
கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கிலோ மீட்டர் குழாய் வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த மூலம் குழாய் வழியாக தினமும் 1.2 கோடி கனமீட்டர் கேஸ் அனுப்ப முடியும். கெயில் நிறுவனம் இந்த கேஸ் குழாய் இணைப்பை உருவாக்கியுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது. மொத்தம் ரூ. 3,000 கோடி […]
டெல்லியில் தெருக்களில் வசித்து வந்த தாய்-மகளை குடிபோதையில் வந்த இரண்டு பேர் கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளின் இரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் உதவி செய்வதற்குப் பதிலாக சம்பவத்தை வீடியோவை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இந்த வைரல் வீடியோவை பார்த்த போலீசார்நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிற்கு 35 வயதும், அவரது மகளும் சுமார் 18 வயது எனவும், ஊனமுற்றவர்கள் […]
ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது. இதையடுத்து அண்மையில் […]
உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் நாம் உள்ளோம். முழு நாடும் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. நமது நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளின் சேவைகள் மற்றும் பொருட்களின் தரம், உலகளவில் இந்தியாவின் வலிமையை நிர்ணயிக்கும்.எந்த ஒரு வளர்ந்துவரும் […]
நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம். நீட் தேர்வை இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரே ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டால், அது மாணவர்களுக்கு மனா அழுத்தத்தை அதிகரிக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், […]
பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் சியாம் சுந்தர். இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய்பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி. இந்நிலையில், பிரசாந்தி திருப்பதியில் […]