டெல்லி :விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா.
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் படிப்படிப்பாயாக அதன் தூரங்கள் குறைக்கப்பட்டு, இடையில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டாலும், இஸ்ரோ தனது முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. கடந்த ஜனவரி 10ஆம் தேதியே 500 மீட்டர் இடைவெளியை 15 மீட்டராக குறைக்க இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது.
தொடர் முயற்சியின் பலனாக ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் செயல்முறையின் முன்னோடியாக பார்க்கப்பட்டும் இந்த விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும், டாக்கிங் பரிசோதனை இன்று வெற்றி பெற்று இஸ்ரோ வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node