காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் முன்னணி நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார்.இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2014ல் தோல்வியடைந்தார். தற்போது ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் ரம்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன் என எழுதிக்கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் புகாரின் அடிப்படையில் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
unknown node