"தேர்தல்களில் முறைகேடு – ஆதாரம் உள்ளது" – ராகுல் காந்தி குற்றசாட்டு.!

தேர்தல் ஆணையம் (ECI) இனி ஒரு நிறுவனமாக இல்லை என்றும், அது பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

RahulGandhi -LokSabhaPolls

டெல்லி :2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இன்று டெல்லியில் நடந்த ‘Constitutional Challenges – Perspectives & Pathways’ என்ற காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான், ம.பி., குஜராத்தில் காங்கிரஸால் ஒரு சீட் கூட வெல்ல முடியாதது வியப்பை ஏற்படுத்தியது என்றும் தேர்தல் ஆணையம் ஓட்டு திருட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், புதிய வாக்காளர்களின் ஓட்டு முறைகேடாக பாஜகவுக்கு செல்வதாக சாடிய அவர், மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம் என்றார்.

இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் பிரதமர் மோடி. பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தங்களிடம் 100 சதவீதம் தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள், உயர் பதவியில் இருந்து கீழ் நிலை வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நடத்திய ஆறு மாத கால ஆய்வில், 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் “போலியானவர்கள்” என்று கண்டறியப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்திருக்கலாம் 2 எனவும், அடுத்த ஓரிரு நாட்களில் இதற்கான ஆதாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.