எல்லை தாண்டியும் காஷ்மீரை பாதுகாக்க ராணுவம் தயங்காது!

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரைக் காக்கத் தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்றும் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என  தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரைக் காக்கத் தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்றும் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ராஜ்நாத் சிங் காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், யாரும் அதை இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாட்டைக் காப்பதில் ராணுவத்தினர் ஆற்றும் வீரதீரச் செயல்களை ராஜ்நாத் பாராட்டினார். நாட்டைக் காக்கத் தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்றும் இந்திய படையினர் தாக்குதல் நடத்துவார்கள் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புவதாகவும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதன்மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.