,

எரிபொருள் கசிவு.. டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்… பதறிய பயணிகள்.!

By

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம்.

அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது.

இதனை அறிந்த விமானி உடனடியாக அருகில் இருந்த பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்தாம். சிறிய தொழில்நுட்ப கோளாறு என்பதால் பயணிகளுக்கு பதற்றம் வர கூடாது என்பதற்காகஅவசர நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லையாம்.  மேலும் பயணிகளுக்கு குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாம். இதனை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிறகு விமானத்தை செக் செய்தததில் தான் எரிபொருள் குறையவில்லை. இண்டிகேட்டர் கருவி தான் எரிபொருள் இருப்பை தவறாக காட்டியது தெரிய வந்ததாம்.தற்போது ஸ்பைஸ் ஜெட் மூலம் வேறு விமானம் வரவழைக்கப்பட்டு பயணிகளை துபாயில் இறக்கிவிட நடவடிக்கை எடுத்துள்ளதாம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.

Dinasuvadu Media @2023