அசாமில் பயங்கர நிலநடுக்கம்...! பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அசாம் முதல்வர் வேண்டுகோள்...!

At 7:15 a.m., a magnitude 7.0 earthquake shook the region of Sonitpur in Assam and surrounding areas.

அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று 7:15 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று 7:15 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய  நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலையில்,  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனையடுத்து இதுதொடர்பாக அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஸ்ஸாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரின் நல்வாழ்வுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.