#Breaking:மக்களே கவனம்...ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை!

The number of omicron infections in India has risen to 1700.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1700 ஆகஉயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில்,அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 510 பேருக்கும்,டெல்லியில் 351 பேருக்கும்,தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,700 நபர்களில்,639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,1061 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.