திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால், 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
unknown nodeஅவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
unknown nodeஇந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை. 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை எனில் உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும்.திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால், 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் இருக்கிறது.மேலும் தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.