#BREAKING: மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது!

Union Minister Narayan Rane has been arrested for slandering Maharashtra Chief Minister Uttam Thackeray.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார். சிவசேனா கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்கள் காரணமாக நாராயண் ராணேவை ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர்.

சுதந்திர தின விழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக கூறி, சிவசேனா கட்சி தொண்டர்கள் ஏற்கனவே போராட்டம், வன்முறையில் ஈடுபட்டியிருந்தனர்.

மும்பை, நாசிக், புனே பகுதிகளில் பாஜக அலுவலங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவதூறு புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ராணேவை கைது செய்துள்ளனர்.