உன்னாவ் பாலியல் விவகாரம்! பாஜக எம்எல்ஏ கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! 3 போலீஸ் சஸ்பெண்ட்!

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய்,  உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாவலராக பணியாற்றிய 2 பெண் போலீஸ் உட்பட 3 போலிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்திர பிரதேச அரசு தெரிவிக்கப்பட்டது. . மேலும் எம்எல்ஏ குல்தீப் சிங் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.