தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ..!

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசு  இந்தியாவில் 55 இடங்களை அடையாளம் கண்டு, அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.மத்திய அரசு  இந்தியாவில் 55 இடங்களை அடையாளம் கண்டு, அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டு உள்ளது. அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்து இருக்கிறது.

unknown node

இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க  அனுமதி அளித்து இருக்கிறது.அதன்படி ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், வேதாந்தா நிறுவனத்துக்கு மற்ற இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று டெல்லியில் கையெழுத்தானது.