ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரைலர்தான் – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்' செய்ய முடியும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

rajnath singh

லக்னோ:மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பலத்தை உரத்துப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரெய்லர் தான். பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்’ செய்ய முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல இடமும் பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தில் உள்ளது. நமது எதிரிகள் இனி பிரம்மோஸிலிருந்து தப்பிக்க முடியாது” என்று சூளுரைத்தார். இந்தப் பேச்சு, இந்தியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.

ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். “இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றவும், உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தவும், வறுமை மற்றும் வேலையின்மையை தீர்க்கவும் விரும்பினால், நாம் உள்நாட்டு உற்பத்தியின் பாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

வர்த்தகம் இல்லாமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி, “நாட்டில் பொதுமக்கள் பணத்தை செலவு செய்யாமல் இருப்பு வைத்திருக்கும் நிலையில் பொருளாதார வேகம் குறையும். வணிகம் நின்றால், முழு பொருளாதார அமைப்பும் பாதிக்கப்படும். எனவே, வர்த்தகம் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், ராணுவ உபகரணங்களின் இறக்குமதி மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்கின்றன என்றும் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பலத்தை உரத்துப் பேசிய ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானின் ஒவ்வொரு இன்ச் நிலமும் பிரம்மோஸ் ஏவுகணைக்கு எட்டக்கூடிய தூரம்தான். நமது எதிரிகள் இனி பிரம்மோஸிலிருந்து தப்பிக்க முடியாது” என்று உறுதியளித்தார். “ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரெய்லர்தான். பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்’ செய்ய முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சூளுரைத்தார்.