பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு உத்தரவு வரும் வரை KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து […]
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு […]
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர், இதனால் பலி எண்ணிக்கை 51 ஆனது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் […]
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கதையை கேட்டால் தலையே சுத்திவிடும். அதுவும் ஆட்டோ ஓட்டாமலேயே, மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுகிறாராம். அட ஆமாங்க… மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5-8 லட்சம் சம்பாதிக்கிறார். அமெரிக்க தூதரகத்திற்கு வரும் விசா விண்ணப்பதாரர்கள், உள்ளே பைகளை கொண்டு செல்ல […]
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் வலுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 5) இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது. ஆம், ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தைலாபுரத்தில் நேற்றைய தினம் சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றயை தினம், ராமதாஸ் […]
காஷ்மீர் : உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து, கையில் தேசியகொடியை ஏந்தியவாரே பாலத்தில் நடந்துசென்றார். திறந்து வைத்த பின், 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்தப் பாலம் பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட உயரமானது, இதில் இயக்கப்பட காத்ரா -ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போதைய சட்டமன்ற பலத்தின்படி, திமுக கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதன் மூலம் அவர்களுக்கு 4 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும். அதன்படி, […]
டெல்லி : இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முடிவுகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமான முடிவு ரெப்போ விகிதமாகும், இதில் ரிசர்வ் வங்கி அதை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, இது சந்தையின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் மஸ்க் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்து வந்தார். மஸ்க் தனது சமூக ஊடக தளம் மூலம் டிரம்பிற்கு ஆதரவாக ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தினார் மற்றும் பொது பேரணிகளில் கலந்து கொண்டார். இதற்காக மஸ்க்கிற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது மற்றும் அவருக்கு DOGE பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் டிரம்பின் லட்சியமான […]
கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட இன்னும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது. அதாவது, பிஎன்எஸ் பிரிவு 105, பிரிவு 25 (12), பிரிவு 142, பிரிவு 121 மற்றும் பிரிவு 190 […]
டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து RTI ல் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் பொதுமக்கள் பயன்ப்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளது. இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, […]
கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன், திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், […]
கர்நாடகா : பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டி.என்.ஏ நெட்வொர்க் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. எம். சின்னசாமி மைதானத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு முன்னதாக இரண்டு நுழைவு வாயில்கள் வழியாக ஏராளமான ரசிகர்கள் திரண்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 […]
டெல்லி : இன்று, உலக சுற்றுச்சூழல் தினம். பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். கடந்த மே 25-26 தேதிகளில் குஜராத்திற்கு பயணம் செய்தபோது, கட்ச்சில் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழுவால் இந்த செடி […]
கர்நாடகா : பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக நீதிமன்ற நீதிபதி சார்பில், ”இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் […]
பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]
சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் […]
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. உச்சக்கட்டமாக கட்சியின் தலைவர் தானே என ராமதாஸ் அறிவிக்க, பொதுக்குழு தன்னையே தேர்வு செய்தது என அன்புமணியும் முரண்டு பிடித்தார். 2026 தேர்தலில் கூட்டணிக்குள் பாமக இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், ராமதாஸ் அதை விரும்பாத நிலையில், சமரச முயற்சி சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இப்பொது, இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் […]
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் (TN Fact Check) விளக்கம் அளித்துவிடும். அப்படி தான் இப்போது பிரதமர் மோடி நாளை பொதுவிடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அது வதந்தி என விளக்கம் அளித்துள்ளது. நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருந்த சூழ்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் […]