வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் என்பது நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது. டிரம்பின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு எதிராக மஸ்க் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் உருவாகியுள்ளது. “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதவை குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் ஹவுஸில் நிறைவேற்றப்பட்டது. இது பொருளாதாரத்திற்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்று […]
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. சம்பவம் நடந்து நாட்கள் கடந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் தீராத சோகமாக இருந்து வருகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது மாநில அரசு. தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ‘சாதகமாக’ தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு (ஐ&பிஆர்) அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்தார். உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இம்முடிவு எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு […]
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று(ஜூன்.07) காலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார். அதாவது, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் முறைகேடு (Match Fixing) செய்து வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையில், ‘வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி போன்றவை ஜனநாயகத்தை […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் தனது சிறப்பு சிவப்பு டெஸ்லா காரை விற்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலியாக மார்ச் மாதம் வாங்கிய தனது டெஸ்லா சிவப்பு காரை டிரம்ப் இனி பயன்படுத்த மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. […]
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பதவில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி […]
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட வரைவு விதிமுறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற பிறகு, சில மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. சமீபத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், இந்த விதிமுறைளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ரூ.2 […]
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி மட்டும் இந்தியாவில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி […]
வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மிகப்பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அதை வெளியிட மறுக்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் […]
சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தங்கள்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடத்துவார்களா? விநாயகரை தமிழக மக்கள் வணங்கும்போது முருகரை குஜராத் மக்கள் […]
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையும் கூட்டம் நடைபெறுகிறது. […]
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. இன்றைய தினம் அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை – மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், […]
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக வெடித்தது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வந்த நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது […]
காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500 (24 யூரோ) என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஒரு துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 2023 அக்டோபர் முதல், காஸாவில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் அன்றாட உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய […]
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது பேசுபொருளாக வெடித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் மஸ்க், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி செய்து, அவரது வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆனால், இப்போது டிரம்ப், மஸ்க்குடன் பேச விருப்பமில்லை என்றும், அவரது நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான […]
சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 31 அன்று மதுரை சென்று, ஜூன் 1 அன்று உத்தங்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக திமுக […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 08-06-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் […]
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை ராஜ் ஷாமானி என்பவர் நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பது வருடங்களாக ஊடகங்களில் இருந்து விலகி இருந்த மல்லையா, இந்த பேட்டியில் தன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை, வணிகம், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சரிவு, ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் சட்டப் போராட்டங்கள் […]