சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக வலுவடையும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இதனால், நாகை முதல், காரைக்கால் , சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக தெரிவித்த தகவலின் படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காலை 11.30 மணிநேர நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது கொடுத்த தகவலின்படி , தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் 3 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அதே பகுதியில் அட்சரேகை 8.9°N மற்றும் தீர்க்கரேகை 82.1°க்கு அருகில் அமைந்தது. ஈ, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கி.மீ, தென்கிழக்கே 320 கி.மீ. நாகப்பட்டினம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 420 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 500 கி.மீ தொலைவில் உள்ளது.
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலம் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும்” என அறிவித்துள்ளது.
unknown nodeபுயலின் காரணமாக நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
