தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்.!18 பேருக்கும் தினகரன் துரோகம் செய்துவிட்டார்...!இனியும் தினகரனை நம்பாதீர்கள்...!அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு தகவல்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

unknown node

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.

unknown node

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.

unknown node

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், டிடிவி தினகரனை நம்பியுள்ளவர்கள் இனியும் அவதிப்படாமல் அதிமுகவில் இணைய வேண்டும் .மனக் கசப்பால் பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் .18 பேரையும் மக்கள் பணியாற்றவிடாமல் தினகரன் துரோகம் செய்துவிட்டார் என்று  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.