BJP :தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்றுமுதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல்வெளியாகி இருந்தது.
அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதனை தொடர்ந்து, 2ஆம் கட்டமாக தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி….
புதுச்சேரி –ஏ.நமசிவாயம்.
திருவள்ளூர் –பொன்.வி.பாலகணபதி.
வடசென்னை –ஆர்.சி.பால் கனகராஜ்.
திருவண்ணாமலை –ஏ.அஸ்வந்தமன்.
நாமக்கல் –கே.பி.ராமலிங்கம்.
திருப்பூர் –ஏ.பி.முருகானந்தம்.
பொள்ளாச்சி –கே.வசந்த ராஜன்.
கரூர் –வி.வி.செந்தில்நாதன்.
சிதம்பரம் (தனித் தொகுதி) –பி.கார்த்தியாயினி.
நாகப்பட்டினம் (தனித் தொகுதி) –எஸ்.ஜி.எம்.ரமேஷ்.
தஞ்சாவூர் –எம்.முருகானந்தம்.
சிவகங்கை –தேவநாதன் யாதவ்.
மதுரை –ராம ஸ்ரீனிவாசன்.
விருதுநகர் –ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar).
தென்காசி (தனித் தொகுதி) –ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்).
