மதுரை:கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமானப் பணி நடைபெற்ற நிலையில், இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
