4 மாதம் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்...! அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் ...!

நான்கு மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று  ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள்

நான்கு மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று  ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

unknown node

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் சில மாதம் அவகாசம் கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் எழுத திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.இந்நிலையில்  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் எவ்வித காலதாமதமும் இல்லை.விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது .இதன்படி குறைந்தது நான்கு மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.