8 மாத பெண் குழந்தையை கடத்திய கும்பல் கைது.!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தையை தமிழரசன் என்பவருக்கு ரூ. 2.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய சினேகா என்பவர், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025