நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி...14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உட்பட மொத்தம் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

heavy rain alert tamil nadu

சென்னை :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, வளிமண்டல காற்று சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இன்று  எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதற்கான தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.