அடுத்த புயல்.? அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம்

The next hurricane is the Meteorological Observatory where a new barometric depression will form in the next 24 hours

வங்க‌க் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றார். இதற்கிடையில், கரையை கடந்த நிவர் புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது என்று கூறினார்.