சென்னை :சென்னை கண்ணகி நகரில் இன்று (ஆகஸ்ட் 23, 2025) அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி, மழைநீரில் அறுந்து விழுந்த மின்சார கேபிள் காரணமாக தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், மழை நீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விபத்து நேரிட்டது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.
