ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு – ஈபிஎஸ்

திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

ஆத்தூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை ரூ.1,000 – ரூ.1,500 என உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. 1000 ரூபாயை முறையாக வழங்குங்கள். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு என விமர்சித்தார். கண்ணை இமைக்காப்பது போல் மக்களை காத்த அரசு அதிமுக அரசு. திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என தெரிவித்தார்.

இதனிடையே, அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.